மீனவர் வீசிய வலையில் வெள்ளை நிறத்தில் சிக்கிய அரிய வகை மீன் - வைரல் புகைப்படம்!
கடலில் விசித்திரமான மீன் ஒன்றை மீனவர் ஒருவர் பிடித்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த ரோமன் ஃபெடோர்சோவ்(39) என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருக்கிறார்.
அப்போது அவர் வெளியே எடுக்க, அதன் உள்ளே வித்தியாசமான ஏதோ ஒன்று இருப்பதை அவர் கண்டார். வெளியே எடுத்ததும் அதில் வெள்ளை நிறத்தில் மீன் ஒன்று இருந்திருக்கிறது.
பச்சை நிறக் கண்கள், வித்தியாசமான வால் மற்றும் கிழிந்த இறக்கைகள் போல தோற்றமளிக்கும் துடுப்புகள் என வினோதமாக காட்சியளிக்கிறது.
இந்த மீனின் புகைப்படத்தை ரோமன் ஃபெடோர்சோவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "Frankenstein's Fish" இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
