டயட் இல்லாமல் உடல் எடையை சட்டென குறைக்கணுமா? இந்த உணவுகள் மட்டும் போதும்!
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் எடையை குறைக்க படாதபாடுகின்றனர்.
இதற்காக கடினமாக உடற்பயிற்சிகள் மட்டுமின்றி பல்வேறு விதமான டயட்டுகளை பின்பற்றி வருகின்றனர்.
உடல் எடையை குறைக்க முடிவு செய்துவிட்டால் மட்டும் போதாது, ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியம்.
நாம் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒருவேளை தவறான உணவுகளை எடுத்துக் கொண்டால், பசி அதிகரித்து எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழல் உருவாகலாம்.
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
குறைந்த கலோரிகள் கொண்ட உணவுவகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த குறைவான கலோரி தினமும் எரிக்கப்பட்டு விடுவதால், உடல் எடையில் பெரிய அளவிலான மாற்றம் ஏதும் இருக்காது.
ஓம தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பசலைக்கீரை
பொதுவாக கீரைகளில் குறைந்த அளவில் கலோரியும், அதிக அளவில் ஊட்டத்துகளும் நிறைந்திருக்கிறது.
இதில் இரும்புச்சத்தும் அதிகம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி தங்களது உணவில் பசலைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த கீரையை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடலின் வலிமையும் மேம்படும்.
அவல்
எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களது காலை உணவாக கலோரிகள் குறைவாக உள்ள அவலை சாப்பிடலாம், செரிமானத்திற்கு ஏற்ற அவல் உடலில் தேவையான கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.
விஷமாகும் அரிசி சாதம்… இனி சுட வைத்து சாப்பிடாதீர்கள்! எச்சரிக்கை
பாசிப்பயறு
புரதச்சத்து அதிகம் நிறைந்த பாசிப்பயறானது, பசியை கட்டுப்படுத்தும், அதிலும் முளைக்கட்டிய பாசிப்பயறில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
வெறும் வயிற்றில் முளைக்கட்டிய பாசிப்பயறு சாப்பிட்டு வருவது மேலும் நன்மைகள் அள்ளி வழங்கும்.
புரோக்கோலி
புரோக்கோலியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் கால்சியம் உள்ளது. இதில் உள்ள சல்போரோஃபேன் என்ற தாவர சத்து, நமது உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி, நமது உடலின் மன அழுத்தத்தை குறைத்து, உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கிறது.
புரோக்கோலியை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
கொழுப்பை ஓட ஓட விரட்டும் சக்தி வாய்ந்த டீ போடலாம்
காய்கறிகள் சாலட்
சிலருக்கு சாலட் பச்சையாக இருப்பதால் பிடிக்காது. ஆனால் சில காய்கறிகள் மற்றும் மிளகு தூள் போன்ற மசாலா சேர்த்து சாப்பிட்டால் அது மிகவும் சுவையாக இருக்கும்.
சாலட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. எனவே முளைகட்டிய தானியங்கள் கொண்டு சாலட் தயார் செய்து தினமும் சாப்பிடலாம்.
முட்டை
புரதம், வைட்டமின்கள், செலினியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ள முட்டையை காலை உணவாக உட்கொள்ளலாம்.
இது பசி உணர்வை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
முறையான உடற்பயிற்சியுடன் முட்டையை தினமும் காலை உணவில் சேர்த்து வந்தால் பலன்களை கண்கூடாக பார்க்கலாம் என ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் கோமாவுக்கு கூட செல்ல நேரிடும்!
வாழைப்பழம்
ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 100 கலோரிகள் மற்றும் 3 கிராம் ஃபைபர் உள்ளது, உங்கள் தினசரி ஃபைபர் தேவையில் 12 சதவீதம் வாழைப்பழத்தில் இருந்து பெற முடியும்.
ஃபைபர் உட்கொள்ளலால் காரணமாக நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த முடியும்.
தனியாக வாழைப்பழங்களை சாப்பிடுவதை விட தயிர், பாலாடைக்கட்டி அல்லது ஓட்மீல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கேரட்
கேரட், அதிகளவு நார்ச்சத்து மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள சூப்பர் உணவு ஆகும்.
கேரட், நமது உடலில் பித்த நீர் சுரப்பை துரிதப்படுத்தி, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
கேரட்டில் அதிக அளவு நார்ச்சத்தும் பீட்டா கரோட்டீனும் அதிகளவு உள்ளது.
ஆண்களையும் தாக்கும் மார்பக புற்றுநோய்
சர்க்கரைவள்ளி கிழங்கு
சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும்.
நார்ச்சத்து, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும்.இன்சுலின் சுரப்பது தடுக்கப்படுகிறது. இதனால் எடை அதிகரிக்காது.
பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் எளிதில் கரையவல்ல நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. குறைந்த கொழுப்பு மற்றும் புரதம், உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பச்சை பட்டாணியில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம், இதய பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கின்றன. இது இனிப்புச்சுவை மிக்கதாக இருந்தாலும், உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த 3 பொருளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்க! உடம்பில் பல அற்புதங்கள் ஏற்படுமாம்
வெள்ளரி
அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதால், கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.