ஓம தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு நொடியில் ரெடி
ஓமம் நம்முடைய பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா.
இவை மூலிகை தேநீர் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது.
இந்த அற்புத மூலிகை பொருள் ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது.
வலையில் சிக்கிய ராட்தச டிராகன்! அதிர்ந்து போன மீனவர்…. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட பகீர் தகவல்
இவற்றில் காணப்படும் தைமால் எனப்படும் அத்தியாவசிய எண்ணெயின் இருப்புக்குக் காரணமான பல ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது.
நம்முடைய தினசரி உணவில் ஓமம் சேர்ப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
நன்மைகள்
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம தண்ணீரை குடித்து வந்தால் அஜீரணத்தை குறைக்கலாம்.
- சிறந்த செரிமானமே தேவையற்ற எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்த உதவும்.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் வீக்கம் பொதுவானது. இவற்றைத் தவிர்க்க, ஒரு கிளாஸ் ஓம விதைகளை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுங்கள்.
- ஓம தண்ணீரை குடிப்பதால் வாயுத்தொல்லையில் இருந்து விடுப்படலாம்.
- ஒரு சில துளசி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவது சளி மற்றும் இருமலின் விளைவை கணிசமாகக் குறைக்கும்.
நீரிழிவு நோயாளிகள் கோமாவுக்கு கூட செல்ல நேரிடும்! ஆபத்தான சர்க்கரையை வெளியேறுவது எப்படி?
ஓமம் தண்ணீர்
தேவையான பொருட்கள்
- பெருஞ்சீரகம் விதைகள் – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- ஓமம் – 1 தேக்கரண்டி
- இஞ்சி – 1 அங்குலம்
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அவை நன்றாக ஆறிய பின்னர் பருகலாம்.
இந்த பானத்தை வெறும் வயிற்றில் பருகவும்.
