2025ஆம் ஆண்டு நடக்கப் போகும் கல்யாணம்: இப்படியெல்லாம் சொன்னா யார் வருவா?
பொதுவாகவே பலருக்கும் திருமணம் என்பது வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த திருமணத்தை வைத்துக் கொண்டு பலரும் பல விதமான அட்டகாசங்களை செய்து வருகிறார்கள்.
அப்படியொரு திருமணத்திற்கு அழைப்புக் கொடுத்த மணமக்களின் அழைப்பு தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வித்தியாசமான அழைப்பு
சமூக வலைத்தளங்களில் ஒரு திருமண பத்திரிக்கை ஒன்று அதிகம் வைரலாகி வந்துக் கொண்டிருந்தது. வைரலாகும் வகையில் அந்தப் பத்திரிக்கையில் என்ன இருக்கிறது என்றுப் பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள்.
அந்த திருமண பத்திரிக்கையைப் பெற்ற ஒருவர் நான் கொடூரமான திருமண பத்திரிக்கையைப் பார்த்தேன். அதில் 2025ஆம் ஆண்டு தான் திருமணம் நடைபெறும் என அச்சிடப்பட்டிருந்தது அதற்காக இப்போதிலிருந்து திருமண பத்திரிக்கைகளை அனுப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்து.
திருமண பத்திரிக்கையில் மட்டுமல்ல நாம் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதாவது திருமணத்திற்கு வருபவர்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் தான் ஆடை அணிந்து வரவேண்டும் எனவும் கருப்பு, ஊதா நிற ஆடைகளுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும் குழந்தை வைத்திருப்பவர்களை குழந்தைகளை பராமரிப்பவர்களிடம் விட்டு விட்டுதான் வரவேண்டும் எனவும் அவர்களை இங்கு அழைத்து வந்து கையாள்வது கடினம் சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாம் நாங்கள் கூறிய நிபந்தனைகளை எல்லாம் கேட்டும் திருமணத்திற்கு வர விரும்பினால் வரும் போது அமர்வதற்கு நாட்காளியும் சாப்பிடுவதற்கு சாண்ட்விச்சும் கொண்டு வாருங்கள் எனவும் மதுபானங்கள் அருந்தவும் கூடாது இங்கு வழங்கப்படவும் மாட்டாது என நிபந்தனைகளில் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிபந்தனைகளைப் பார்த்தவர்கள் இவர்களின் திருமணத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி செய்தார்கள் போல என பலரும் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.