திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் விவாகரத்தா?: இனிமேல் தான் எல்லாமே ஆரம்பிக்கப் போகிறது!
சம்யுக்தா - விஷ்ணுகாந்த் இவருவரும் அண்மையில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்துக் கொண்டார்கள் என்ற செய்திகளுக்கு சம்யுக்தா தனது பதிவில் பதிலளித்திருக்கிறார்.
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
சினிமாவில் காதல் திருமணம் என்றால் பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதுபோல சீரியல்களில் நடிப்பவர்களும் தனக்கு ஜோடியக நடிக்கும் நடிகை, நடிகர்களுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து ஜோடியாகவும் நடிக்கிறார்கள்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தவர்கள் தான் சம்யுக்தா - விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் இவர்கள் இருவரும் திருமணம் செய்து ஒரே மாதத்தில் பிரிந்து விட்டார்களாக என்று ஆச்சரியத்துடன் கேட்டு வந்தார்கள்.
விவாகரத்து உண்மையா?
இந்நிலையில் விவாகரத்து பற்றி சம்யுக்தா தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
டியர் ஹேட்டர்ஸ் நினைத்தது நடந்து விட்டது என சந்தோஷப்படலாம். ஆனால் இனிமேல் தான் என்னுடைய வாழ்க்கை தொடங்க போகிறது.
நீங்கள் எதிர்பாராத அளவிற்கு என்னுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கப் போகிறது. அதை தாங்கிக் கொள்ளும் மனநிலையை கொடுங்கள் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பெண்ணை தோற்கடிக்க முடியாத பட்சத்தில் அவளது நடத்தையையும் பொய்யான அன்பையும் பயன்படுத்திறார்கள் எனவும் பதிவு செய்திருக்கிறார்.