Super Singer: இலங்கை குயிலுக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிர்ஷ்டம்... பிரமிப்பில் அரங்கம்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் இலங்கை குயிலான பிரியங்ஹாவிற்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ள நிலையில் அரங்கமே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
பிரியங்ஹா என்ற இந்த சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் படிப்பிற்கு கூட ஒருவர் உதவி செய்து தான் படிப்பதாக அவரது தந்தை அரங்கத்தில் ஏற்கனவே கூறியிருந்தார்.
தற்போது பள்ளி பருவத்திற்கு சென்றுள்ள குழந்தைகளில் பிரியங்ஹா பாடகி ஜானகியின் பாடலை பாடி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் பிரியங்ஹாவின் படிப்பிற்கு உதவி செய்துவரும் நபர் ப்ரான்ஸில் இருந்து தற்போது சூப்பர் சிங்கர் மேடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
மேலும் குறித்த சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் காசோலையையும் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |