சீஸ் பிரெட் சாண்ட்விச் ஈஸியா செய்து ஹெல்த்திய சாப்பிடலாம்! எப்படி தெரியுமா?
அவசரத் தேவைக்கு சீஸ் மற்றும் பிரெட் பயன்படுத்தி சுவையான சீஸ் பிரெட் செய்து சாப்பிடலாம்.
இந்த கொரோனா காலத்தில் ஓட்டல்களில் சென்று உணவு சாப்பிடுவது என்பது ரிஸ்க்கான காரியம்.
இதனால் ஆரோக்கியமான முறையில் சுவையாக சாப்பிட விரும்பினால் சீஸ் பிரெட் சாண்ட்விச் செய்து ருசியுங்கள்.
தேவையான பொருட்கள்
- பிரெட் - 2
- முட்டை - 1
- வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் பொடி - 1
- சிட்டிகை மிளகுப் பொடி
- கொஞ்சம் சுவைக்காக உப்பு - தே.அ
- சீஸ் வெண்ணெய் - 1
செய்முறை
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் சீஸ் துருவி அதையும் கலந்துகொள்ளுங்கள்.
இதை தற்போது முட்டை ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வாட்டி எடுக்கவும்.
அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.
தற்போது மீண்டும் தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.