பிக்பாஸ் போனாலும் சொந்தம் போகாது.. ஏடிகேவை வீட்டிற்கு வர சொல்லி பிரியாணி செய்து கொடுத்த மகேஸ்வரி!
பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி, ஏடிகேவை அழைத்து சாப்பாடு கொடுத்த காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வி.ஜே மகேஸ்வரியின் தீவிர முயற்சி
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய மீடியாத்துறைக்கு ஆரம்பித்தவர் தான் வி.ஜே மகேஸ்வரி.
இதனை தொடர்ந்து இவரின் தீவிர முயற்சியால் குறித்த தொலைக்காட்சியில் முன்னணியில் தொகுப்பாளராக உருவெடுத்தார்.
இவரின் விடாமுயற்சிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்குமா? என பல முயற்சிகளை செய்து வந்தார்.
பிரியாணி செய்து அசத்தும் மகேஸ்வரி
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இவரின் நடவடிக்கைகளில் அதீத மாற்றம் இருந்த காரணத்தால் சில வாரங்களிலே வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்தவகையில், ஏடிகே மற்றும் ராமுடன் இணைந்து வீட்டில் பிரியாணி செய்யும் வீடியோக்காட்சி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றாலும் உங்களின் நட்பு தொடர்கிறதா?” என கருத்துக்களை பதிவிட்ட வருகிறார்கள்.