தொகுப்பாளராக களமிறங்க போகும் காமெடி வடிவேலு! வேற லெவலில் ரீ-என்ட்ரி... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
வைகை புயல் வடிவேலு விரைவில் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வேறு லெவல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு “எனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது என்றும் உடலிலும் தெம்பு இருக்கிறது என்றும் ஆனால் யாரும் தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் நீங்கள் அனைவரும் ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் இருக்கிறீர்கள், ஆனால் நான் பத்து வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்” கண் கலங்கியது ரசிகர்களை கதிகலங்க வைத்தது.
இந்நிலையில், வடிவேலு ஓடிடி தளம் ஒன்றில் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள புது தகவலில் பெயரில், தெலுங்கில் பல நிகழ்ச்சிகளை ஓடிடியில் வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும்... ஆஹா என்கிற ஓடிடி தளம் விரைவில் தமிழிலும் ஒரு தளத்தை உருவாக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக சில முன்னணி நடிகர்களை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் ஒரு காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கு வடிவேலுவை அணுகி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகராக மட்டும் இன்று தற்போது தன்னுடைய காமெடி பேச்சால் ஒரு தொகுப்பாளராக வேற லெவலில் பிளான் பண்ணி இந்த நிகழ்ச்சியில் இறங்குகிறார் வைகைப்புயல்... இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு காமெடி சரவெடி தான்.