வெளியேறிய ராமின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? சம்பளத்தை கேட்டு ஆடிப்போன பார்வையாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய ராமின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்
இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் வெளியேறியுள்ளார்கள்.
கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமை குறைந்த வாக்குகளை பெற்ற ராம் வெளியே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் அவர் பிக் பாஸில் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ராமின் சம்பளம்
இன்றுடன் மொத்தம் 63 நாட்கள் ராம் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
அவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 15 முதல் ரூ. 22 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றதாம். அந்தவகையில் பார்த்தால் மொத்தம் 10 லட்சத்துக்கும் மேல் ராம் சம்பாதித்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ராம் கடைசி வாரத்தினை தவிர ஏனைய வாரங்களில் சுவாரஷ்யம் இல்லாமலேயே விளையாடி வந்தார். இந்த நிலையில் அவர் 63 நாட்களில் பெற்ற சம்பளத்தினை கேட்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
#Ram Eliminated#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/RcD8lACwKI
— BIGG BOX TROLL (@drkuttysiva) December 10, 2022