வெள்ளத்திரை நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஆல்யா! மெழுகு சிலைப்போல் ஜொலிக்கும் புகைப்படங்கள்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான நடிகை ஆல்யா மானசா சேலையில் தங்கம் போல் ஜொலிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீரியலுக்கு அறிமுகம்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஆல்யா மானசா முதலிடத்தை பிடிக்கிறார். இவருடைய யதார்த்தமான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.
இவர் தன்னுடைய நடிப்பு பயணத்தை “ராஜா ராணி” சீரியலின் மூலம் ஆரம்பித்தார். இதற்கு முன்னர் டான்ஸ் மற்றும் தொகுப்பாளர் என மீடியாத்துறையில் பணியாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவருடன் சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் இருவரின் சீரியல் பயணங்களும் தொடரந்து கொண்டே தான் இருக்கிறது.
ஆம், சஞ்சீவ் கயல் சீரியல் நடிக்கிறார் மேலும் ஆல்யா பிரபல தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க ஓப்பந்தமாகியிருக்கிறார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இதனை தொடர்ந்து இருவரும் ஒரு “யூடியூப் சேனல்” ஒன்றை நடத்தி வருகிறார்கள். இதனால் இவர்களுக்காக ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் எப்போதும் தன்னுடைய சமூக வலைத்தளபக்கங்களில் ஆக்டிவ்வாக தான் இருப்பார்கள்.
மேலும் தற்போது இரண்டாவது குழந்தை பிரசவத்திற்கு பிறகு குண்டாக இருந்த ஆல்யா சுமார் ஒரு மாத காலப்பகுதியில் சீரியலுக்கு கம் பேக் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சேலையில் போட்டோ ஷீட் ஒன்றை செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தும் இவரின் அழகு குறையவில்லை என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.