இவ்வளவு சோகமா? முதல் முறையாக மகன் தொடர்பில் பேசிய தளபதி.. என்ன சொல்லிருக்கிறார்?
தளபதியின் மகன் சஞ்சய் சினிமாவிற்குள் வருவது தொடர்பில் முதல் முறையாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றது.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக “வாரிசு” திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அடுத்து விஜயின் நடிப்பில் “லியோ” திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
மேலும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தன்னை மாதிரி தன்னுடைய பிள்ளையும் பெரிய ஆளாக வர வேண்டும் என விஜய் எதிர்பார்ப்பதாக வாரிசு பட நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மகனை பற்றிய உருக்கம்
இதனை சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார். அதில் “நடிகர் விஜய் எப்படி சினிமாவில் இவ்வளவு பெரிய ஸ்டாரானார் என்பது யாமறிந்த விடயம்.
சஞ்சையை நான் நடிகனாக பார்க்க ஆசை பட்டேன் சஞ்சய் இயக்குநர் மீது தான் ஆர்வமாக இருக்கிறான்.” என நடிகர் விஜய் கூறியதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ விஜயிற்குள் இப்படியொரு கவலையுள்ளதா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.