இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர் ரகுமான்! பிறப்பில் ஒரு இந்துவா?
தமிழ் சினிமாவின் இசைப்புயல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 59 ஆவது பிறந்தநாளை கொண்டிவருகின்றார்.இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான்
‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார்.

மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பில் ஒரு இந்துவா?
இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர் திலீப் குமார். இவர் பிறப்பில் ஒரு இந்துவாக இருந்த போதும், அவர் தனது குடும்பத்துடன் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளார்.
அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ரஹ்மான் ஒருபோதும் இசை வாழ்க்கையைத் திட்டமிடவில்லை, ஒரு காலத்தில் கணினி பொறியாளராக வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்துள்ளது.

தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இருபதுகளின் முற்பகுதியில், அவர் ஆழ்ந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |