நடிகர் விஜய் மகன் சஞ்சய் வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயின் வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்தார் என்பதும் இதனையடுத்து அவர் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து அவ்வப்போது செய்திகள் கசிந்து வரும் நிலையில் தற்போது சஞ்சயின் 14 நொடி வீடியோ ஒன்று திடீரென ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சியில், சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போன்றும் அவர் இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்....
My videos are out ?#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/hBn6SUgUld
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 2, 2021
