புத்தாண்டின் முதல் மகாலட்சுமி ராஜ யோகம் - 3 ராசிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் மகாலட்சுமி ராஜயோகம் ஜனவரி 18ஆம் தேதி உருவாகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிகளுக்கு அதிகாரத்தையும், செல்வ செழிப்பையும் கொடுக்க போகிறது.
மகாலட்சுமி ராஜயோகம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, செவ்வாய் மற்றும் சந்திரன் இணையும் காரணமாக மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
இந்த ஆண்டில் உருவாகும் முதல் ராஜயோகம் என்பதால், ஜோதிடர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு நிகழும் இந்த விசேஷ யோகம், செல்வம், செழிப்பு, மனமகிழ்ச்சி மற்றும் சமூக மரியாதையை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ராஜயோகத்தின் சிறப்பு என்னவெனில், செயலாற்றல், தைரியம் மற்றும் மன உறுதியை குறிக்கும் செவ்வாயும், மனம், உணர்ச்சி மற்றும் செல்வ ஓட்டத்தை குறிக்கும் சந்திரனும் இணைவதன் மூலம், வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உருவாகிறது.
குறிப்பாக தொழில், வியாபாரம், அரசியல், கலை மற்றும் நிர்வாகத் துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் வருமான வளர்ச்சி கிடைக்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

மேஷம் ராசி
ஜனவரி 18ல் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்கு மங்களகரமானது. புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்டகாலமாக வராத பணம் திரும்பக் கிடைக்கும். பதவி உயர்வு, முக்கிய வாய்ப்புகள் வரலாம்.
மேஷ ராசியினருக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி வரும் 18ஆம் தேதிக்கு பிறகு நீங்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதிகார பதவியும் தேடி வரும். பிஸினஸில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலகட்டம்.
கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் லாபம் கொடுக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியினருக்கு வரும் ஜனவரி 18ஆம் தேதி உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலமாக அமையப்போகிறது. ஜோதிடத்தில் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.
வசதி வாய்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரகனான சுக்கிரன் உங்களது ராசிக்கு அதிபதி என்பதால் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை தரும்.
புதிதாக வீடு, வண்டி, வாகனம் வாங்கும் காலகட்டம். சொந்தமாக பிஸினஸ் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு, வெளியூர் சென்று வருவீர்கள்.
தீராத கடன் தீரும். கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
மகரம் ராசி
வரும் ஜனவரி 18ஆம் தேதி உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மகர ராசியினருக்கு வாழ்க்கையின் புதிய தொடக்கமாக அமைய போகிறது. நினைத்தது நிறைவேறும் காலகட்டம்.
தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இரும்பு, சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க பெறும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசு வழியில் டெண்டர்கள் கிடைக்க பெறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).