நடிகர் விஜய் மகன் சஞ்சய் பிரபல சீரியல் நடிகையை காதலிக்கிறாரா? உடைந்த உண்மை
நடிகர் விஜய்யின் மகன் சஞசய் சீரியல் நடிகையை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவரது மகன் சஞ்சய். வெளிநாட்டில் படிப்பை முடித்து குறும்படங்களை தயாரித்து வருகின்றார்.
இந்நிலையில் பிரபல ரிவி சீரியல் நடிகை, சஞ்சய்யை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவருடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.
இதனால் இருவரும் டேட் செய்துவருவதாக பல தகவல்கள் பரவிவந்த நிலையில், குறித்த சீரியல் நடிகை ரவீனா அதற்கான விளக்கத்தினை அளித்துளளார்.
ரவீனா கூறுகையில், தனக்கு விஜய் சாரை அதிகமாக பிடிக்கும் அவருடன் ஜோடியாக நடிக்க முடியாது என்பதால் அவரது மகனுடன் நடிக்க ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் நாங்கள் இருவரும் டேட் செய்வதாகவும், காதலிப்பதாகவும் தகவலைகளை பரப்பி வருகின்றனர். தான் யாருடனும் காதலில் விழவில்லை என்றும் கூறியுள்ளார்.