வறண்ட சருமத்திற்கான இயற்கை பராமரிப்புகள்! இந்த தவறுகளை செய்யாதீங்க
பொதுவாகவே சரும வகைகளில் எண்ணெய் சருமம், சாதாரண சருமம், வறண்ட சருமம், அதிக உணர்திறன் கொண்ட சருமம் என பல வகைகள் காணப்படுகின்றது.
நாம் சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தும் முன்னர் நமது சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமைமாதது.

அந்தவகையில் வறண்ட சருமத்தை எவ்வாறு முறையாக பராமரிப்பது என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் குளிர்காலத்தில் அதிகமான சரும பாதிப்புகளை சந்திக்கின்றார்கள். குளிர்காலத்தில் குறைவான ஈரப்பதம் மற்றும் குளிர்காற்று ஆகியன சருமத்தில் இயற்கையாக காணப்படும் ஈரப்பதத்தை முற்றிலும் நீக்கி சருமத்தை சொரசொரப்பானதாக மாற்றிவிடுகின்றது.

எப்படி பரமரிப்பது?
1. வறண்ட சருமத்தை சீராக பராமரிக்க ஆலிவ் எண்ணெயில் தயார் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சிறந்தாக இருக்கும். இது நீண்ட நேரம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதில் ஆற்றல் பாட்டுகின்றது.ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள், ஸ்குவாலீன் மற்றும் சேதமடைந்த சருமத்தை சரிசெய்யும் பிற பண்புகள் உள்ளன.

2. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அவகோடாவில் தயார் செய்யப்பட்ட பேஸ் பேஃக்கை பயன்படுத்துவது நல்ல தேர்வாக இருக்கும். இது சருமத்தில் எண்ணெய் பதத்தை ஏற்படுத்துவதால், வறண்ட சருமத்துக்கு சிறந்த பராமரிப்பாக அறியப்படுகின்றது. அல்லது அவகோடாவில் யார் செய்யப்பட்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
3.இயற்கை தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரையால் ஸ்க்ரப் தயாரித்து பணப்படுத்தலாம். உங்கள் சருமத்திற்கு வறண்ட அமைப்பையும் தோற்றத்தையும் தரக்கூடிய இறந்த சரும செல்களை குணப்படுத்த, வீட்டில் தயாரிக்கப்பட்ட மென்மையான சர்க்கரை ஸ்க்ரப்பை பயன்படுத்துவது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். விரும்பினால், லாவெண்டர் போன்ற அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கலாம், இது இயற்கையான நறுமணத்தைக் கொடுப்பதுடன் தளர்வை ஊக்குவிக்கும்.

4.கற்றாழை ஜெல் இயற்கையாகவே ஒரு குளிர்ச்சியான, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்ட ஒரு பொருள். இது சருமத்திற்கு உடனடி நீரேற்றத்தை அளிப்பதுடன், எரிச்சல், சிவத்தல் போன்றவற்றைத் தணித்து வறண்ட சருமத்தை விரைவில் மென்மையாக மாற்றும்.
5.ஷியா பட்டர் இயற்கையான கொழுப்பாக அறியப்படுகின்றது. இதில் வைட்டமின்கள் A, E மற்றும் F நிறைந்தது. இது சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை அளித்து, சேதமடைந்த சருமத்தைப் புதுப்பிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.குறிப்பாக வறண்ட, உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

6.தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களுமே சருமத்திற்கு ஈரப்பதமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. வாரத்திற்கு இரண்டு முறை இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்தி பேஸ் மாஸ்க் போடுவது, வறண்ட சருமத்துக்கு சிறந்த பராமரிப்பாக இருக்கும்.
தவிர்க்க வேண்டியவை
வறண்ட சருமம் இருப்பவர்கள் மறந்தும் கூட சரும பராமரிப்பில் புளிப்பான தயிரை பயன்படுத்த கூடாது. இது சருமத்திற்கு நன்மை பயக்காது. மேலும் இது சருமத்தில் இருக்கும் சிறிதளவு ஈரப்பதத்தை கூட உறிஞ்சி, சருமத்தை மேலும் வறட்சியாக்கி விடும். இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்.

சிலர் சரும பராமரிப்பில் எலுமிச்சையை சேர்த்துக்கொள்ளும் வழக்கம் கெண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தை மேலும் வறட்சியாக்கிவிடும். மேலும் எரிச்சல் உணர்வையும் அளெகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஸ்கிரப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. விரும்பினால் கூட கடுமையான அல்லது கரடு முரடான ஸ்கரப்பை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது சருமத்தை இன்னும் மோசமாகிவிடும். இதனால் சருமத்தில் வறட்சி, அரிப்பு, சிவத்தில் போன்ற பிரச்சனைகள் அதிகமாக்கி பிரச்சினையை இன்னும் மோசமாக்கிவிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |