வெளியில் தலைகாட்ட முடியாமல் கொளுத்தும் வெயிலை சமாளிக்க வேப்பம் பூ ரசம்! எப்படி செய்யலாம்
பொதுவாக வெயில் காலத்தில் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதுவும் இந்தக் கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க இது உதவும். இந்தக் காலத்தில் உடல் தளர்ச்சியும் களைப்பும் உண்டாகும்.
இதனால் நம் உடம்பிற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த உங்கள் உணவில் வேப்பம் பூ ரசத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- புளி - 1 (எலுமிச்சை அளவு)
- துவரம் பருப்பு - 1/2 கப்
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- வர மிளகாய் - 2
- மல்லி - 1 தேக்கரண்டி
- தக்காளி - 1
- கொத்தமல்லி - சிறிது
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- வேப்பம்பூ - 1 தேக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி வேப்பம்பூவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு புளியை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
இப்போது குக்கரை திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் மிளகு, சீரகம், வர மிளகாய் மற்றும மல்லி சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளி தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில்வறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கி விட வேண்டும்.
பின்னர் அதில் அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் வேப்பம்பூவில் உள்ள கசப்பு அதிகமாக இறங்காமல் இருக்கும்.
இறுதியில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்தால் கொளுத்தும் வெயிலுக்கு சுவையான வேப்பம்பூ ரசம் தயார்.