மணமணக்கும் வாசணையுடன் தயிர் சேமியா செய்வது எப்படி?
வீடுகளிலிருக்கும் குழந்தைகளுக்கு வேறுவேறு நிறங்களில் உணவுகள் செய்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் குழந்தைகளுக்கு விரைவில் செய்யக்கூடிய வகையில் தயிர் சேமியா ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதன்படி, தயிர் கலந்த உணவுகளை அதிகம் குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடலில் அதிகம் வெப்பம் இருக்காது.
தொடர்ந்து உடலிலுள்ள சருமம் காலப்போக்கில் பளபளப்பாக மாறும்.
அந்தவகையில் தயிர் சேமியா எவ்வாறு செய்வது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
தயிர் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 3 பச்சை மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மாதுளை முத்துக்கள் - அரை கப்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) ச
சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தயாரிப்புமுறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பு, எண்ணெய், சேர்த்து நன்றாக கொதித்து வரும் போது சேமியாவை போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
பின்னர் அதற்கு தேவையான கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சேமியா வெந்ததும் இதனை குளிர்ந்த நீரில் போட்டு கழுவி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
சேமியா ஒன்றுடன் ஒன்று ஓட்டாதவாறு தனியாக பிரிந்து வரும் பததிற்கு வேக வைத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து தயிரை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் சேமியாவுடன் கலந்து விட வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தாளிப்புக்கு தேவையான பொருட்களை போட்டு தாளித்து, தயிரில் ஊற்ற வேண்டும். அதில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தயிரில் மேல் ஊற்ற வேண்டும்.
கடைசியாக மாதுளை முத்துக்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை மேலோட்டமாக தயிர் சேமியாவில் போட்டு விட வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தயிர் சேமியா தயார்!