குழையாமல் குக்கரில் தாளித்து செய்யும் தக்காளி சாதம் - ருசியாக செய்வது எப்படி?
பலருக்கும் வெரைட்டி ரைஸ் என்றால் பிடிக்கும். அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனால் தான் லெமன் ரைஸ், பிரிஞ்சி, ஃபைரைட் ரைஸ், தக்காளி சாதம் போன்றவை குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் ரெசிபியில் அதிகம் இடம் பிடிக்கிறது.
அந்த வகையில், குக்கரில் செய்யும் தக்காளி சாதம். அதுவும் குழையால், உதிரி உதிரியாக பாஸ்மதி அரிசியில் செய்வது எப்படி? என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி தேவைக்கு ஏற்பட், வெங்காயம், தக்காளி, கொத்தம்மலி, புதினா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கரம் மசாலா பொருட்கள்,
நீரிழிவு நோயாளிகள் மக்காச்சோளம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?
செய்முறை விளக்கம்
குக்கரில், எண்ணெய் ஊற்றி அதில் கரம்மசாலா பொருட்கள் பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, அன்னாச்சி பூ, ஆகியவறை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து, தக்காளி, வெங்காய குழைந்து வந்த பின்பு அதில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இப்போ ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான குக்கரில் தாளித்த தக்காளி சாதம் தயார்.
இத்தோடு, தயிர் பச்சடி அல்லது பக்கோடா வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.