இனி இப்படி குளியுங்கள்....உடம்புக்கு நல்லதாம்!
குளித்தல் என்பது வெறுமனே உடல் சுத்தத்துக்காக மட்டுமானதல்ல. அது உடல் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. வெறுமனே தண்ணீரை அள்ளி தலைக்கு ஊற்றி குளிப்பதனால் மட்டும் ஆரோக்கியம் கிடைத்துவிடாது.
அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றது. அதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக அனைவரும் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், எடுத்த எடுப்பிலேயே தலைக்கு தண்ணீர் ஊற்றுவதாகும். முதலாவதாக உச்சந்தலையில் சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு, பின்னர் கால்களில் நீர் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால்தான் உடலின் வெப்பம் முழுவதும் காதுகள், கண்கள் வழியாக வெளியேறும்.
நல்லெண்ணெயை சூடாக்கி அதில் மிளகையும் தோல் நீக்கிய இஞ்சி சிறு துண்டையும் பொடித்துபோட்டு ஆறவைக்க வேண்டும். அதை உடலிலும் தலையிலும் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பின் குளிக்க வேண்டும். இப்போது மட்டும் சூடான நீரில் குளிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் குளிப்பதற்கு முன்னர் வாய் முழுவதும் நீரை நிரப்பிவிட்டு குளித்ததும் துப்பிவிடும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், நுரையீரலுக்கு மிகவும் நல்லதாகும்.
காலையில் எழுந்ததும் குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படும்.