மாதக் கணக்கில் கொத்தமல்லி கெட்டுப்போகாமல் இருக்க வேண்டுமா? அசத்தலான காட்சி இதோ
கொத்தமல்லியை வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தவில்லை.. கொத்தமல்லி இலை மற்றும் அதனுடைய விதையில் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் உள்ளன. கொத்தமல்லி அந்த அளவிற்கு விலை உயர்ந்ததும் கிடையாது.
கொத்தமல்லியை நீங்கள் சிறிதளவு மணல் கலந்த மண்ணில், கொத்தமல்லி விதைகளை தூவி, தினமும் நீர் ஊற்றி வீட்டிலேயே வளர்க்கலாம். உங்களது தினசரி தேவைக்கான அளவு கொத்தமல்லி இலையை நீங்கள் உங்களது வீட்டிலே பயிர்செய்யலாம்.. இதனால் உங்களுக்கு பிரஷ் ஆன, வாசனை மிக்க கொத்தமல்லி வீட்டிலேயே கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் நாம் கடைகளில் வாங்கும் கொத்தமல்லியினை மாதக்கணக்கில் வாடாமல் வைத்துள்ள கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை இக்காட்சியில் காணலாம்.
இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.
இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.
உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.
கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் இந்த பிரச்சனை நீங்கும்.
ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.
பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில்புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். தோல் நோய்களை குணமாக்குகிறது.
மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், 1 டீஸ்பூன் கொத்தமல்லி சாறு மற்றம் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் அகலும்.