இந்த வெயில் காலத்தில் உடல் வறட்சியை விரட்ட தண்ணீர் மட்டும் போதாது: இதுவும் வேண்டும்!
பொதுவாக கோடை காலத்தில் நம் நாக்கு எதையாவது தேடிக்கொண்டிருக்கும். அதுவும் இந்த மாதத்தில் ஆரம்பித்ததும் சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்தக் கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை தக்க வைக்க இது உதவும். இந்தக் காலத்தில் உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும்.
நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும் இவ்வாறு தாகம் ஏற்படுகையில் சில பானங்களை எடுத்துக் கொண்டால் அது நம் தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்ல, உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சி தருவதாகவும் அமைய வேண்டும்.
அப்படி தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது என்றால் இதுவும் முக்கியம் தான். அதுஎன்னவென்றால் எலக்ட்ரோலைட்ஸ் அளவு இதுவும் இந்த வெயில் காலத்திற்கு முக்கியமானது தான்.
எலக்ட்ரோலைட்ஸ்
எலக்ட்ரோலைட்ஸ் என்பது பொட்டாஷியம், கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட மினரல்ஸை கொண்டது. இது நாம் சாப்பிடும் உணவு மற்றும் பானங்களில் கூட கிடைக்கின்றது.
இதன் செயற்பாடானது எமது உடலுக்கு மிகமுக்கியமானதாகும். அதாவது இந்த எலக்ட்ரோலைட்ஸ் உடலில் உள்ள சத்துக்களை எல்லா செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் செல்களில் இருந்து கழிவை எடுத்துக் கொண்டு சென்று உடலில் உள்ள சத்துக்களை எல்லா செல்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
இது நரம்புகள், தசைகள், இதயம், மூளை ஆகியவை சீராக செயல்பட உதவுகிறது. மேலும், நாம் சிறுநீர் கழிக்கும்போது, இந்த எலக்ட்ரோலைட் ஒவ்வொரு முறையும் குறையும்.
இந்நிலையில் மலைகள், கிணறு அல்லது பூமி ஊற்றில் கிடைக்கும் தண்ணீரில்தான் கால்சியம், மெக்னீஷியம், க்ளோரைட் இருக்கிறது. இது தண்ணீரில் நமக்கு கிடைப்பது மிகவும் அரிதானது ஒன்று.
இந்த எலக்ட்ரோலைட்டை அரை கப் ஆரஞ்சு ஜூஸ், 2 கப் தண்ணீர், ¼ கப் எலுமிச்சை சாறு, உப்பு, தேவைப்பட்டால் தேன் என்றபவற்றை சேர்த்துக் குடித்தால் தேவையான எலக்ட்ரோலைட் கிடைக்கும்,