பச்சையாக காய்கறிகளை சாப்பிட்டால் ஆபத்தா? அதிலும் இந்த காயை தவறிக் கூட சாப்பாட்டில் சேர்க்காதீங்க..!!
பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அது சத்தான உணவுகளை எடுத்து கொள்வதால் மட்டும் தான் முடியும்.
உணவைப் பொறுத்தவரை காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் பிரதான பகுதியாக இருக்க வேண்டும்.
தற்காலத்தில் அதிகமாக சாப்பிடும் நொறுக்கு தீனிகள், பாஸ் ஃபுட் போன்றவற்றை முடிந்த அளவு தவிர்த்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.
அந்த வகையில் பச்சையாக காய்கறிகள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பச்சையாக சாப்பிடக் கூடாத காய்கறிகள்
Image - glamour
1. காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் பொழுது ஜீஸ் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக அதனை மென்று சாப்பிட்டால் ஏராளமான பலன் கிடைக்கும்.
2. பச்சையாக சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான சேப்பங்கிழங்கு இலைகளை சுடுநீரில் வேகவைத்து அதன் பிறகு சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த இலைகளில் இருக்கக்கூடிய அதிக அளவு ஆக்சலேட் உடலுக்கு தீங்கு விளைக்கும்.
3. வெளிநாட்டு உணவுகளுடன் அதிகமாக சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் முட்டைகோஸில் கண்ணிற்கு தெரியாத நிறைய புழுக்கள் இருக்கின்றன.
Image - eatthis
4. குடைமிளகாயை நறுக்கி அதனை சுடுநீரில் நன்றாக கழுவிய பிறகு தான் உணவில் சேர்க்க வேண்டும். கடைகளிலிருந்து வரும் குடைமிளகாயில் புழுக்களின் முட்டைகள் தங்கி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
5. ஒட்டுண்ணிகள், புழுக்கள் மற்றும் புழுக்களின் முட்டைகள் என அனைத்தும் வாழ ஏற்ற இடமாக இருப்பது கத்திரிக்காய் தான். இவைகள் ரத்த ஓட்டத்தில் நேரடியாக நுழைவதற்கு வழிவகுக்கும். ஆகையால் இந்த காயை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |