ஏழு வருட சிகிச்சை... கோமாவில் இருந்த பிரபல நடிகை - இப்போ என்னாச்சு?
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்த பிரபல நடிகை முமைத் கான் 15 நாட்களாக கோமாவில் இருந்து 7 வருடமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கோமாவில் விழுந்த நடிகை
தமிழ் திரைப்படங்களில் வௌி மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் மிகக் குறைவு. பொதுவாக வெளிமாநில நடிகைகள் கவர்ச்சி நடனங்களுக்காக பயன்படுத்தப்டுவார்கள்.
அப்படி பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்தவர் தான் முமைத் கான். இவர் 2007ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘போக்கிரி’ திரைப்படத்தில் ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’ எனும் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இது தவிர பம்பர கண்ணாலே, டாடி மம்மி வீட்டில் இல்ல..’ போன்ற பல பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி உள்ளார். ஆனால் கடந்த 2019ம் ஆண்டிற்கு பின்னர் முமைத்கானை படங்களில் நடிப்பதை காணவில்லை.
இந்த நிலையில் இவர் சமீப காலத்தில் பெசிய ஒரு நேர்காணலின்போது அவர் சினிமாவில் சில காலமாக வராததற்கு என்ன காரணம் எனப்தை கூறி இருந்தார்.
இவர் சிறு வயதில் இருந்தே ஏழ்மையாக வாழ்ந்தாலும் தன்னுடைய பெற்றோர் இவரை வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தியது கிடையாதாம்.

இருந்தும் அவர் சினிமாவிற்கு வந்தாராம். அப்படி இரக்க அவர் சமீப காலமாக சினிமாவில் வராமல் இருந்ததற்கு காரணம் தனக்கு ஒரு பாரிய விபத்து ஏற்பட்டு அந்த விபத்தினால் மூளைக்கு செல்லும் தனது 5 நரம்புகள் பாதிக்கபட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால், 15 நாட்கள், தான் கோமாவில் இருந்ததாகவும், மருத்துவர்கள் தன்னை ஓய்வெடுக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார். இதனால் இவர் சினிமாவில் நடிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இந்த விபத்தில் கோமாவிற்கு சென்றது மட்டுமல்லாமல் 7 ஆண்டுகள் இதற்காக சிகிச்சை எடுத்ததாகவும் இந்த நடிகை நேர்காணலின்போது கூறி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |