10 நிமிடத்தில் சுவையான குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் - செய்வது எப்படி?
குழந்தைகள் விரும்பி சாப்பிட சுவையான குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் - 2, நறுக்கிய குடைமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
முதலில் ஒரு பாத்திரத்தில் சீஸ் துருவல், குடைமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது சீஸ் கலவையைப் பரப்பவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு, சீஸ் உருகிய உடன் இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.
இப்போ சுவையான சூப்பரான குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி! இவை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்துகொடுக்கலாம்....