பச்சையாக இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! ரொம்ப ஆபத்தாம்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது. ஆனால், அனைத்து காய்கறிகளையும் பச்சையாக சாப்பிடகூடாது.
சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பச்சைக் காய்கறிகள் பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. சரியான அளவில் உட்கொண்டால், உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது.
சிலர் கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை, சமைக்காமல் சாப்பிட விரும்புகிறார்கள்.
ஆனால் இந்த காய்கறிகளை தொடர்ந்து பல நட்களுக்கு பச்சையாக சாப்பிட்டால் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பொதுவாக பச்சையாக யாரும் சாப்பிடுவதில்லை. ஆனால் தற்போது சிலர் உருளைக்கிழங்கையும் பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடுவது பல நோய்களை உண்டாக்கும். சமைக்காத உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற சிறப்பு வகை நச்சு உள்ளது. இது தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வெண்டைக்காய்
சிலர் வெண்டைக்காயை கூட பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் பச்சை வெண்டைக்காய் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். செரிமான அமைப்பை பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாய்வு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
கத்தரிக்காய்
கத்தரிக்காயை பச்சையாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. சமைக்கப்படாத கத்திரிக்காயை சாப்பிடுவது வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.