அல்சரை குணப்படுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு சூப்பர் ரெசிபி!
மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம்.
அதில் ஒரு வியாதிதான் இந்த அல்சர். அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைவதுதான் இந்த முட்டைகோஸ் சாதம். எப்படி செய்வது தெரியுமா?
தேவையான பொருட்கள்
- துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்
- வடித்த சாதம் - ஒரு கப்
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
- மிளகு சீரகத்தூள் -1 தேக்கரண்டி
- வறுத்த வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
- இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
- கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகத்தூள், மிளகு, கடலைப்ருப்பு, பட்டை, வேர்கடலை, என்பவற்றைப் போட்டு பிறகு நன்கு ஊறிய பாசிப்பருப்பையும், பொடியாக நறுக்கிய இஞ்சியையும் சேர்த்துக் கிளறிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் துருவி எடுத்து வைத்துள்ள முட்டைக் கோஸை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இவ்வாறு எல்லாம் சேர்த்து வதக்கிய முட்டைக்கோஸ் மசாலாவை வடித்து எடுத்து கொஞ்சமாக நெய் சேர்த்த சாதத்தில் போட்டி புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் கொத்தமல்லித் தலையை தூவி இறக்கிக் கொண்டார் அல்சரை காணாமல் செய்யும் முட்டைக்கோஸ் சாதம் தயார்.