அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்களா நீங்கள்? இதனை மட்டும் செய்தால் போதும் உடனே குணமாகும்!
அல்சர் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வொன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
அல்சர் பிரச்சினை
மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.
அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சினை ஏற்படுகிறது.
அல்சரை குணப்படுத்தும் மருத்துவம்
ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து மேலே உள்ள தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள வெண்மை நிறம் கொண்ட ஜெல்லை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.
அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
அல்லது நன்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டிய அதனை மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் பிரச்சனை குணமாகும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து குடித்து வந்தால் அல்சர் முற்றிலும் குணமாகும்.
இதனை குடிப்பதன் மூலம் முடி வளர்தல், உடம்பில் உள்ள சூடு முற்றிலும் தணிந்து விடும், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.