அல்சரை குணமாக்க என்ன செய்யலாம்? உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ
மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம்.
அல்சர் ஏற்படுவதற்கான காரணம்
`பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண். அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சினை ஏற்படுகிறது.
நீங்கள் உணவகங்களில் சாப்பிடும் போது அதில் சேர்க்கப்படும் மசாலா, காரம் நிறைந்த உணவை சாப்பிடுவதாலும். மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகை பிடித்தல் போன்ற காரணத்தினாலும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும் அல்சர் உருவாகக்கூடும்.
அறிகுறிகள்
வயிற்றின் மேல் பகுதியில் வலி உணவு சாப்பிட்ட ஓரிரு மணித் துளிகளில் பசி ஏற்படுவது, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம் வருவது, நெஞ்சு வலி, ரத்த வாந்தி, உடல் பருமன், சோர்வு, போன்றவையும் அல்சரின் அறிகுறிகளாகும்.
சிறந்த தீர்வு
இந்த அல்சரை விரட்டி அடிப்பதற்கு சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
அரை கரண்டி சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
அல்சர் இருப்பவர்கள் கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு போன்றவற்றை சேர்க்கவேண்டும்.