சுவையான அரிசி பாசிப்பருப்பு கஞ்சி... சுடச் சுட செய்து குடியுங்கள்!
Healthy Food Recipes
By Nivetha
அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி – ஒரு கப்
- சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
- பாசிப்பருப்பு – 25 கிராம்
- தயிர் – ஒரு கப் (கடைந்தது)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால் நன்றாக குழைந்து வெந்துவிடும்.
பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும். சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US