10 நிமிடத்தில் ஹோட்டல் சுவையில் சுவையான ஃப்ரைடு ரைஸ் - செய்வது எப்படி?
பொதுவாக ஃப்ரைடு ரைஸ் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிடதான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள்.
ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
முதலில் பாசுமதி அரிசியை கொண்டு பக்குவமாக உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்பு அடி கனமான அகலமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடு ஆன பிறகு எண்ணெயில் இருந்து அப்படியே ஆவி பறக்கும் போது, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1/2 கப், கேரட் – 1/4 கப், பீன்ஸ் – 1/4 கப், குடை மிளகாய் – 1/4 கப், இந்த காய்கறிகளை எல்லாம் போட்டு அந்த எண்ணெயிலேயோ நன்றாக வதக்கவேண்டும்.
காய்கறிகள் வாதங்கும்போது இதோடு பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 4, சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 சேர்த்து நன்றாக காய்கறிகளை வதக்கி விடுங்கள்.
சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்? வாழ்நாள் முழுவதும் நோயின்றி வாழலாம்
அடுத்தபடியாக காய்கறிகள் தேவையான உப்பை போட்டு, அஜினோமோட்டோ – 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, வடித்து வைத்திருக்கும் உதிரி உதிரியான சாதத்தை கடாயில் இருக்கும் காய்கறிகளோடு சேர்த்து, சாதத்திற்க்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விடுங்கள்.
சாதம் சூடாகியதும், வெள்ளை மிளகு பொடி – 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன் சேர்த்து, பக்குவமாக சாதம் உடையாமல் கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இறுதியாக, வெங்காயத் தாள் இருந்தால் இதன் மேலே தூவி அப்படியே சுட சுட பரிமாறினால் இது ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சுவையில் ப்ரைடு ரைஸ் போலவே இருக்கும்.