மீண்டும் மாற்றப்பட்ட டுவிட்டர் லோகோ: எலான் மஸ்கை பந்தாடும் இணையவாசிகள்!
பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டர் செயலியின் லோகா மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
மீண்டும் குருவியாக மாறிய டுவிட்டர்
லோகோவை மாற்றிய எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்ந்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி டுவிட்டர் லோகோவாக இருந்த நீல குருவியை ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனத்தைச் சேர்ந்த நாயின் புகைப்படத்தை லோகோவாக மாற்றியிருந்தார்.
இனி இதுதான் லோகா என நாயின் லோகோவை இணையவாசிகள் ஏற்றுக் கொண்டிருத்தார்கள். இந்நிலையில், இன்று மீண்டும் அதே நீலக் குருவியை லோகோவாக மாற்றியிருக்கிறார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள் எலான் மாஸ்க் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என திட்டித்தீர்த்த வண்ணம் இருக்கிறார்கள்.