நாயின் தலை துண்டிப்பா? வைரலான புகைப்படத்தால் அதிர்ந்து போன மக்கள்- வெளியான உண்மை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாயின் தலை துண்டிக்கப்பட்டு கிடப்பது போன்ற புகைப்படம் வைரலானது.
அமெரிக்காவின் Baltimore நகரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை Nathan Sievers என்பவர் பகிர்ந்திருந்தார்.
”தரையில் படுத்துக் கிடக்கும் என் நாயை பார்க்கும் போது, தலை துண்டிக்கப்பட்டு விட்டதை போன்று தெரிகிறது” என்று குறிப்பிட்டு அந்த படத்தை பகிர்ந்திருந்தார்.
பலரும் இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்ட படம் என கமெண்டுகளை பதிவிட்ட நிலையில், அது உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.
அதாவது, சுவரின் கடைசி ஓரத்தில் நாய் தலை வைத்து படுத்திருக்கும் போது, மிக துல்லியமாக நாயின் உடல் மறையும்படி எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும்.
எனினும் உண்மையான புகைப்படத்தை பகிருங்கள், அப்போது தான் நம்புவோம் என பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து நாயின் புகைப்படத்தை பதிவிட்ட Sievers, ஆரோக்கியமாக உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.