எலான் மஸ்க் டுவிட்டர் பயனர்களுக்கு வழங்கும் அதிரடியான மாற்றங்கள்
சமூக வலைத்தளங்களின் ஒன்றான டுவிட்டரில் அதிரடி புதிய மாற்றங்கள் வரப்போகிறது என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டுவிட்டரை வாங்குவதற்கு காரணம்
பல பிரபலங்கள் பயன்படுத்தும் தொலைதொடர்பு வலைத்தளங்களில் டுவிட்டர் முதல் இடத்தை பிடிக்கிறது.
சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.
மேலும் டுவிட்டரின் மூலம் உள்ள பற்றினால் அந்த நிறுவனத்தை பல கோடி அமெரிக்க டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறித்து பல விடயங்கள் வெளியாகின.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளராக இருந்து வரும் எலான் மஸ்க் தன்னுடைய பயனர்களின் வேண்டுகோளின் பிரகாரம் புதிய மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அந்தவகையில் டுவிட்டர் வெளிவரவிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
எலான் பயனருக்கும் வழங்கும் அறிவிப்புகள்
- ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
- இதனால் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. டுவிட்டரில் நீண்ட வடிவிலான செய்திகள் அனுப்ப முடியாத நிலைக் காணப்பட்டது. ஆனால் தற்போது நீண்ட வடிவிலான செய்திகள் அனுப்புவதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார். இந் பிரச்சினையும் விரைவில் சரிச் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
- பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் டுவீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யப்படவுள்ளது.
-
மேலும் டுவிட்டருக்கான தனித்தன்மையாக காணப்படும் சில விதிமுறைகளில் மாற்றம் செய்ய போவதாகும் அறிவித்துள்ளார்.