டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்: ட்ரெண்டிங் நாயின் புகைப்படத்தை வைப்பதற்கான காரணம் என்ன?
டுவிட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க் தற்போது டுவிட்டரின் லோகோவை மாற்றியிருக்கிறார்.
லோகோவை மாற்றிய எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல சிக்கல்கள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இவருக்கு எதிராக பல வழக்குகளும் தொடர்ந்துக் கொண்டே வந்தது.
இவர் தற்போது டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
முன்னதாக நீல நிற குருவி ஒன்று இருந்தது தற்போது அதற்கு பதில் நாய் புகைப்படம் ஒன்று லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.
ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.
எலான் மஸ்க் திடீரென லோகோவை மாற்றக் காரணம் என்ன? அதுவும் நாயின் லோகோவை வைத்தற்கான காரணம் என்பது பற்றி இன்னும் விரிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை.