பெண்களே தாலியுடன் ஊக்கு மாட்டுகிறீர்களா? வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்
பொதுவாக திருமணமான பெண்கள் கலாச்சாரா அடிப்படையில் தாலி அணிவது வழக்கம். இது திருமண வாழ்க்கையின் ஆதாரமாக காணப்படுகின்றது. இந்த தாலி கணவன்,மனைவியின் புனிதமான பந்தத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
இதன்போது ஒன்பது இழைகள் கொண்ட மாங்கல்யத்தை அணிவார்கள். இதை பெண்கள் எப்போதும் பக்தியுடனும் புனிதமாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த தாலிக்கயிற்றை எப்போதும் பெண்கள் கழுத்தில் அணிந்திருப்பது அவசியம்.
இந்த நேரத்தில் தாலி கயிற்றுடன் ஊக்கு சாவி மாட்டுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். இது ஜோதிடப்படி சில பிரச்சனைகளை கொண்டு வரும் அது பற்றிய முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமாங்கல்யம்
மாங்கல்யம் கணவனுக்காக பெண்கள் அணிவதாகும். இந்த தாலி கணவன் மனைவியுடன் இல்லாத நேரத்தில் இந்த மாங்கல்யம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பெரியவர்களால் ஆசிர்வதிக்கபட்டு அணிவிக்கப்படுகிறது.
கணவனின் அனைத்து செயல்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் இந்த தாலி சம்பந்தப்பட்டுள்ளது. இதை தன் காரணத்தினால் தான் தாலியை பயபக்தியுடன் மிகவும் புனிதமாக பார்க்கிறார்கள். பிரச்சனைகளை தடை செய்யும் இந்த மாங்கல்யத்தில் தங்கம் அணியலாம்.
இந்த மாங்கல்யத்தை கயிற்றில் அணியும் நபராக நீங்கள் இருந்தால் அதை எப்போதும் மஞ்சளாக வைத்திருப்பது அவசியம். தினமும் குளிக்கும் போது தாலிக்கயிற்றில் மஞ்சள் தேய்த்து குளித்தால் தாலிக்கயிற்றை எப்போதும் மஞ்சள் நிறமாக வைத்து கொள்ளலாம்.
தங்க தாலியில் மஞ்சள் தேய்க்க தேவைில்லை. இது கணவனின் முன்னனேற்ற விஷயத்தில் தடையாக இருக்கும் விஷயங்களை விரட்ட உதவும். இத்தனை நன்மைகள் படைத்த இந்த புனிதமான திருமாங்கல்யத்தில் சிலர் ஊக்கு சாவி போன்றவற்றை அணிவார்கள்.
இவை இரும்பினால் ஆன பொருட்களாகும். இதுபோன்ற பொருட்களை மாங்கல்யத்துடன் சேர்த்து அணிய கூடாது. இதற்கான காரணம் இரும்பு சனிபகவான் பார்வை பட்ட ஒரு உலோகம் ஆகும்.
இது எதிர்மறை ஆற்றலை தருவதால் கணவனின் வருமானத்தையும் வளர்ச்சியையும் தடை செய்து மோசமாக பாதிக்கும். இந்த காரணம் தான் தாலியில் ஊக்கு சாவி போன்ற பொருட்களை மாட்ட கூடாது என எச்சரிக்கப்படுகின்றது. இதுபோன்ற பொருட்கள் தங்கத்திற்கு கேடு வினைவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |