Twitter உருவான கதை உங்களுக்கு தெரியுமா? யாமறியாத சில உண்மைகள்..
பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாம் பயன்படுத்தும் ஆப்கள் எப்படி உருவாக்கப்பட்டது என்ற கதை இருக்கும்.
டுவிட்டர் ஆப் அறிமுகம்
இதன்படி, இன்ஸ்டாகிராம், வாட்சப், இமோ என பல ஆப்கள் இருக்கிறது நாம் இன்னொருவருடன் தொடர்புக் கொள்வதற்கு நம் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்வதற்கு, ஆனால் இதன் உருவாக்கம் எம்மில் சிலருக்கு தெரியமால் இருக்கும்.
இந்த வரிசையில் இருக்கும் ஆப் தான் டுவிட்டர், இந்த ஆப் தான் பெரிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், பிஸ்னஸ் மேன் என பல பெரிய தலைகள் பயன்படுத்துகிறது.
இவ்வாறு உருவாக்கம் பெற்று மக்கள் மத்தியில் பல விடயங்களைக் கொண்டு சேர்க்கும் டுவிட்டரின் கதை தொடர்பாக தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
நாம் தற்போது டுவிட்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் டுவிட்டர் ஒரு அமெரிக்கா சமூக வலைத்தளமாகும்.
கண்டுபிடிப்பாளர்கள்
இந்த ஆப்பை ஜாக் டோர்சே, நெள கிளாஸ், பிஸ் ஸ்டோன், மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து 2006- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதம் ( Twitter) என்ற பெயருடன் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த செயலி வந்த புதிதில் பெரியளவில் பயனர்கள் மத்தியில் வரவேற்பு இல்லையென்றாலும் காலங்கள் செல்ல நம்பர் 1 ஆக தற்போது தகவல்களை பகிர்ந்துக் கொண்டு வருகிறது.
இந்த வளர்ச்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா? 2012-ஆம் ஆண்டு நடந்துக் கொண்டிருக்கும் போது 100 மில்லியன் பயனர்களால் நாளொன்றுக்கு சுமார் 340 மில்லியன் ட்விட்களையும் மற்றும் 1.6 பில்லியன் தேடல்களையும் பயன்படுத்தியிருந்தார்கள்.
புதிய அப்டேட்கள்
ஆனால் இதில் போடும் டுவிட்களிலுள்ள எழுத்துக்களை 140 ஆக வரைக்கப்பட்டிருந்தது. இதனால் சோட் and சுவிட்டாக தான் தகவலை பயனர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
இந்த ஆப்பில் என்ன விசேஷம் என்றால் பகிரும் விடயம் சுருக்கமாகவும், விரைவாகவும் பயனர்களுக்குக் கொண்டுச் செல்லப்படும்.
இதனை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ட்விட்டர் தனி நிறுவனமாக இருந்து பொது ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
இது போன்று ஆரம்பத்தில் 140 எழுத்துக்களாக இருந்து டுவிட்கள் 2017-ஆம் ஆண்டு முதல் 240 எழுத்துக்களாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்திகளுடன் வீடியோ, ஸ்டிக்கர் என்பவற்றையும் பதிவிறக்கம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட டுவிட்டரில் தற்போது எலோன் மாஸ்க் CEO– வாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.