சிறப்பு விருந்தினரிடம் சரமாரியாக கலாய் வாங்கிய முக்கிய போட்டியாளர்! பதிலளிக்க முடியாமல் கண்கலங்கிய நொடிகள்
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் விக்ரமனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளும் போஸ்ட்டுக்களை தொலைக்காட்சியில் போட்டு காட்டி பார்வதி கடுப்பேத்தியுள்ளார்.
மக்களின் வெற்றியாளன்
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தனி உள்ளிட்ட போட்டியாளர்கள் பார்க்கப்படுகிறார்கள். இவர்களில் ஆரம்பத்திலிருந்து அசீம் தான் மக்களின் வெற்றியாளனாக தெரிவாகி வருகிறார்.
இவர் மட்டும் ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டில் உண்மை முகத்தைக் காட்டும் போட்டியாளர் என மக்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்தது.
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் போதும் இவர் அடிக்கடி பொது இடத்தில் கத்தி பேசியுள்ளதாகவும் பெண்களிடம் தவறாக பேசியுள்ளதாகவும் பல குற்றஞ்சாட்டுகள் எழுந்தது.
இதனால் மக்கள் மத்தியில் வளர்ந்துக் கொண்டிருந்த அசீம் சற்று தளர்ந்து விக்ரமன் அவர்கள் தற்போது முன்னிலையில் இருக்கிறார். இவர்களுக்கான வாக்குகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறைகளை புட்டு வைத்த பிரபலம்
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் பார்வதி போட்டியாளர்களின் குறைகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.
இதனை மறைமுகமாக கேட்காமல் இன்டர்விவ் மாதிரியான அமைப்பில் கேட்டுள்ளார். இதனால் ஜனனி விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட அமுதவாணன் இதற்கு பிறகு இது தொடர்பில் பேச வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னராகவிருக்கும் விக்ரமனை வெளியில் நெட்டிசன்கள் எவ்வாறு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சில பதிவுகளை போட்டு காட்டியுள்ளார்.
இதனை பார்த்த விக்ரமன் முதலில் சிரித்து விட்டு இதற்கான பதிலை கூற ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.