மைக்கை கழற்றி விட்டு ஜனனி - அமுதவாணன் செய்த செயல்! வெளியான சர்ச்சைக்குரிய வீடியோ - கமல் எச்சரிப்பாரா?
பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன் – ஜனனி இருவரும் மைக்கை கழற்றி விட்டு ரகசியம் பேசிய வீடியோவை ரசிகர்கள் வைலரக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது முதலே விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன் – ஜனனி இருவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு பெயரை எடுத்து வருகின்றார்கள்.
வைரலாகும் ரசிகர்களின் குறும்படம்
ஜனனி இலங்கை தமிழ் பெண். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ஜனனிக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேபோல் அமுதவாணன் விஜய் டிவியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகின்றனர்.
மைக்கை கழற்றியது குறித்து கமல் எச்சரிப்பாரா?
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் மைக்கை மாட்டாமல் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கடுப்பாகி உலகநாயகன் இது குறித்து எச்சரிக்கை விடுப்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரலாகும் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
audience are taken for granted ?#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/AyJ6ky3QnR
— LEO (@ViberPost) November 4, 2022