இந்த ராசியினரை தோற்கடிப்பது நடக்காத காரியம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல் வாழ்க்கை, தொழில், காதல், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை,எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் யாராலும் தோற்கடிக்கவே முடியாத அளவுக்கு சக்திவாய்ந்த ஆளுமை கொண்டவர்களாகவும், எதிரிகளுக்கும் பிடிக்கும் அளவுக்கு தனித்துவமான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

அப்படி எதிரியை கூட தன் ரசிகனாக மாற்றும் ஆற்றல் வாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக திகழும் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் தனித்துவமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்ககள்.
இவர்களின் குணம் இவர்களின் ரசிகர்களை மாத்திரமன்றி எதிரிகளையும் ஈர்க்கும் அளவுக்கு சக்தி கொண்டதாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தங்களின் ரகரிய தன்மைக்கும், மர்மமான இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் இலக்கை நோக்கி ஒரு குறிக்கோளுடன் பயணிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களை கட்டுப்படுத்துவதும், தோற்கடிப்பதும் யாராலும் இயலாத விடயமான இருக்கும்.
இவர்கள் ஒரு விடயத்தில் வெற்றியடைய வேண்டும் என முடிவு செய்துவிட்டால் உயிரை கொடுத்தாவது அதனை அடைந்தே தீருவார்கள்.
ரிஷபம்

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் அசுர குருவான சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் தங்களின் நிலையை தாங்களே உயர்த்திக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பதற்கு யாருடைய துணையும் தேவையே கிடையாது. இவர்கள் தங்களின் நேர்மையாக குணத்தாலும், கடின உழைப்பாலும் வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே மிகவும் அமைதியானவர்களாகவும் அழகிய தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களை ஏமாற்ற நினைத்ததால் சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஒரு உணர்வை நிச்சியம் ஏற்படுத்திவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |