இன்று செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் அந்த 3 ராசியினர் யார்?
இன்று செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி இருப்பதால் எந்தெந்த ராசியினர் சிறப்பான பலனை அடைவார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.
ஜோதிடத்தின் படி செவ்வாய் கிரகமானது மே மாதம் 11ம் தேதி வரை ரேவதி நட்சத்தில் சஞ்சரிக்கின்றார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன் கிரகமாகும்.
செவ்வாய் கிரகம் இவ்வாறு ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவதால் அனைத்து ராசியினருக்கும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இத்தருணத்தில் எந்தெந்த மூன்று ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியினால் திடீர் வருமானம் உயர்வு காணப்படுவதுடன், பணியிடங்களில் சம்பள உயர்வும் காணப்படுகின்றது.
தொழில்முனைவோரும் நல்ல லாபத்தினை பெறுவதுடன், தலைமைத்துவ பண்புகளும் மேம்பட வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய இந்த காலம் சிறந்ததாக இருக்கும்.
புதிய வணிக ஒப்பந்தங்கள் லாபத்தை பெற முடியும், கூட்டாக தொழில் நடத்தி வருபவர்களுக்கு இந்த காலக்கட்டம் நம்பிக்கைக்குரியதாக இருக்கின்றது. விபத்து மற்றும் காயங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கும் ஊதியம் சிறப்பாக கிடைக்கும் நிலையில், நிதி நிலைமை உங்களுக்கு பலுவாக அமையும். ஊடகம், விளம்பரம், தகவல் தொடர்பு இந்த துறைகளில் பணிபுரிபவர்களுக்கு வெகுமதி கிடைக்கலாம்.
நீண்ட நாட்களாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலத்தில் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். ஆரோக்கிய உணவுப்பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் உங்களை சேர்த்துக் கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசியினர் இந்த செவ்வாய் கிரக நட்சத்திர பெயர்ச்சியினால், மிகப்பெரிய நன்மையை அடைவார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
உங்கள் தொழில்சார் அந்தஸ்தும் புகழும் மென்மேலும் சிறப்படையவுள்ளதுடன், அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.
நீண்ட காலமாக அரசு பணிக்கு தயாராகி வருபவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வந்துசேரும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |