35 வயதை எட்டிய ரச்சிதா மகாலட்சுமி... அம்மா குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு வைரல்!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அம்மாவின் மடியில் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து, தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலித்து வருபவர் தான் ரச்சிதா மகாலட்சுமி.

இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனியாக வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய ரச்சிதா அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.
தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில், 35 வயதை எட்டியுள்ள ரச்சிதா அம்மாவுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களுடன் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |