இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன?
ஜோதிட சாஸ்திரம் போன்று எண் கணிதம் பல நூற்றாண்டுகளாக ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தீர்மானிப்பதில் முக்கிய இடம் பிடிக்கிறது.
எண்கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் தேவதைகளாக இருப்பார்களாம்.
குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள், தங்கள் துணையின் வாழ்க்கையில் செழிப்பு, வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அந்த வகையில், என்னென்ன திகதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
எண் 1 (பிறந்த தேதிகள் 1, 10, 19 மற்றும் 28) | வாழ்க்கை பாதை எண் 1-ல் பிறந்த பெண்கள் அதிக மன உறுதி மற்றும் தெளிவான சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை துணையாக அடையும் ஆண்கள் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். வாழ்க்கை துணைக்கு சரியான வாழ்க்கையை காட்டும் மனைவிகளாக இருப்பார்கள். தன்னம்பிக்கை, சுதந்திரம் மற்றும் தீர்க்கமான தன்மை ஆகிய சமநிலையான மற்றும் ஆதரவான திருமண வாழ்க்கையை உருவாக்கும் பெண்களாக இருப்பார்கள். |
எண் 5 (பிறந்த தேதிகள் 5, 14 மற்றும் 23) | எண் 5-ல் பிறந்த பெண்கள் தன்னிச்சையானவர்கள் மற்றும் சாகசக்காரர்களாக இருப்பார்கள். அவர்களை இலகுவாக சமாளிக்க முடியும். இவர்களை திருமணம் செய்யும் ஆண்களுக்கு பக்கத் துணையாக இருப்பார்கள். நாளை சுவாரஸ்யமாகவும், வெற்றிகரமாகவும் மாற்றும் திறன் இவர்களுக்கு உள்ளது. அவர்களின் திறந்த மனமும் தெளிவான தொடர்பும் கணவரை பதட்டம் இல்லாமல் வைத்து கொள்ளும். ஆற்றல் மற்றும் தைரியமான இயல்பு சரியான வாய்ப்பை கைப்பற்றிக் கொடுக்கும். |
எண் 3 (பிறந்த தேதிகள் 3, 12, 21 மற்றும் 30) | எண் 3-ல் பிறந்தவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் நம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இதனால் அவர்களை திருமணம் செய்யும் ஆண்களை அரவணைக்கும் பழக்கம் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அதனை அமைதியாக கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கும். அவர்களின் வெளிப்படையான இயல்பு திருமண உறவில் கூடுதல் மகிழ்ச்சியைச் சேர்க்கிறது, அதே நேரத்தில் அவர்களின் உள்ளார்ந்த துணையை ஊக்குவிக்கும். தனக்கு வரும் அதிர்ஷ்டத்தை கணவருக்கும் கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).