எலுமிச்சை மரம் இலை தெரியாமல் காய்க்கணுமா? இந்த நீரை 5 நாட்கள் ஊற வைத்து ஊற்றுங்க
வீட்டில் இருக்கும் எலுமிச்சை மரம் காய்க்கவில்லை என்றால் அதற்கு என்ன செய்து காய்க்க வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை மரம்
எலுமிச்சை செடி வளர அதிக ஊட்டச்சத்து நிறைந்த உரம் தேவை. இதற்க்கு இரசாயன உரம் பயன்படுத்தாமல் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து உரம் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
அரிசி மற்றும் பருப்பு கழுவிய நீர்: வீட்டில் உணவு செய்ய பயன்படுத்தப்படும் அரிசி பருப்பு கழுவிய நீரை கீழே ஊற்றி வீணதக்க கூடாது. அதை அப்படியே ஐந்து நாட்களுக்கு புனிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அந்த நீருடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து எலுமிச்சை செடிக்கு ஊற்ற வேண்டும். இதை பத்து நாட்களுக்கும் ஒரு முறை செய்யலாம். இது செடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து காய்க்க செய்யும்.
தேயிலை தூள்: நாம் தேனீர் ஊற்ற பய்னபடுத்தும் தேயிலை தூளை நன்றாகக் கழுவி, உலர வைத்து செடியின் வேர்ப்பகுதியில் போட்டால் அது மண்ணின் வளத்தை அதிகரித்து காய்க்க செய்யும்.
வேப்பம் புண்ணாக்கு: இப்படி சிலருக்கு வேப்பம் புண்ணாக்கு கிடைக்கும். அப்படி கிடைப்பவர்கள் அரை ஸ்பூன் அளவு செடிக்கு போடலாம். இது மண்ணை வளமாக்குவதுடன் பூச்சிகளையும் விரட்டும். தாவரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும்.
வாழைப்பழத் தோல்: நாம் தூக்கி வீசும் வாழைப்பழ தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கி அதை உரமாக பயன்படுத்தலாம். இதில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
இது செடியில் அதிக பூக்கள் பூக்கவும், காய்கள் காய்க்கவும் உதவும். மேலும், இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஒரு ஸ்பூன் உலர்ந்த தேயிலை தூளுடன் இரண்டு ஸ்பூன் வாழைப்பழத் தோல் தூள் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் எலுமிச்சை செடியின் தொட்டியின் விளிம்புகளில் போடவும். இப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நீங்கள் தாவரத்திற்கு உரம் செய்யும் போது இது இரசாயனமற்ற வளர்ச்சியை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
