சித்தார்த் படத்தை யதார்த்தமாக்கிய மருத்துவர்! இறுதியில் அரங்கேறிய சோகம்
மரணத்திற்கு முன்னரே தான் இறப்பிற்கு தேவையான விடயங்களை சரியாக செய்து வைத்த மருத்துவரின் ஏற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர்
பொதுவாக திரைப்படங்களில் தான் காதலிக்கான தன்னுடைய வாழ்க்கை தியாகம் செய்வார்கள். ஆனால் நிஜ வாழ்க்கை இவ்வாறு செய்வது மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மருத்துவரொருவர் அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் ஒரு நாள் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது அவருக்கு இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்ததில் இவருக்கு புற்றுநோய் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் தான் இன்னும் இரண்டு வருடங்களில் இறந்து விடுவார் என தெரிந்து அதற்கு தேவையான விடயங்களை செய்து வைக்க ஆரம்பித்துள்ளார்.
எதிர்க்காலத்தை வடிவமைத்த மருத்துவர்
இந்த நிலையில் தன்னுடைய மனைவிக்கு முதல் வேலையாக விவாகரத்து கொடுத்துள்ளார். மனைவி தான் பிரிந்த பின்னர் விதவையாக இருந்து விட கூட என்பதில் குறித்த மருத்துவர் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கான சிகிச்சைகளையும் செய்து கொண்டு தன்னுடைய பிணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர் இறுதியாக அவருடைய நண்பர்களுடன் பேசியுள்ளார்.
அப்போது தான் இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் இறந்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் கூறியது போல், சரியாக இரண்டு மணித்தியாலத்தில் இறந்து போயுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “வாழும் காலத்திலே மனைவிக்கும் சாவுக்கும் ஒன்றும் செய்யாத கணவர்மார்கள் மத்தியில் இவரின் செயல் வியக்கதக்கது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.