மனைவியால் உயிருக்கு ஆபத்து: பிரதமர் அலுவலகத்தில் அழுது புலம்பிய கணவர்
பொதுவாகவே கணவன்மார்கள் தான் மனைவியை தாக்கி துன்புறத்துவதாக வழக்குகளை கேள்விப்பட்டிருப்போம்.
இங்கு வழக்கத்திற்கு மாறாக மனைவி தன்னை தினமும் அடிப்பதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் கணவன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்த கணவன்
தினமும் தனது மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றி பாதுகாப்பு வழங்கி உதவுமாறு கோரி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் ஒன்றை அளித்த கணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது மனைவியால் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.
அவர் தனது ட்வீட்டை பெங்களூரு நகர பொலிஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,
Would anyone help me? Or did anyone help me when this happened?
— Yadunandan Acharya (@yaadac) October 29, 2022
No, Because I am a man!
My wife attacked me with knife, Is this the naari shakti you boost about? Can I put a domestic violence case against her for this? No!@PMOIndia @KirenRijiju @NyayPrayaas@CPBlr#MenToo pic.twitter.com/VNqtTQ5kPK
“யாராவது எனக்கு உதவுவார்களா? அல்லது இது நடந்தபோது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? நான் ஒரு மனிதன்!
என் மனைவி என்னை கத்தியால் தாக்கினாள். இது தான் நரி சக்தியா? இதற்காக அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா?
மனைவியால் கத்தியால் குத்தப்பட்டதில் தனது கையில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெங்களூர் பொலிஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக புகார்கொடுக்குமாறும் இவரது குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கூறியுள்ளார்.