பிணத்தை தோண்டி எடுத்து ஆட்டம்போடும் வினோத மக்கள்! காரணம் என்ன தெரியுமா?
மடகாஸ்கர் நாட்டில் இறந்த நபர்களின் சடலத்தை வைத்து நடனமாடும் வினோத சம்பவம் அரங்கேறி வருகின்றது.
சடலத்துடன் ஆட்டம் எதற்காக?
மடகாஸ்கர் நாட்டில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய முறை தான் இதுவாகும். இந்த விசித்தரமான வழக்கம் எதற்காக என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மடகாஸ்கரில், இந்த வழக்கத்தை ஃபமதிஹானா (எலும்புக்கூட்டை திருப்புதல்) என கூறுகின்றனர். அதாவது இறந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் எலும்புக் கூடாக மாறுகிறார்களோ? அவ்வளவு சீக்கிரம் அவர்கள் ஆன்மா விடுதலை ஆகும் என்று கூறுகின்றனர்.
அதாவது உடல் சதையோடு இருக்கும் வரை உடலினுள் இருக்கும் ஆன்மா வேறு உடலுக்கு செல்ல முடியாமல் தவிப்பதால், அங்கிருக்கும் மக்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் சடலத்தை வெளியே எடுத்து நடனமாடுவார்களாம்.
உயிரிழந்தவர்களின் உடலுடன் பாட்டு பாடி நடனமாடி சடலத்தை புதைக்கிறார்கள். இந்த பாரம்பரியத்தை உயிரிழந்த இரண்டாவது ஆண்டு அல்லது ஏழாவது ஆண்டில் செய்கின்றனர்.