இரவில் சென்றால் உயிராபத்தா? இந்தியாவின் பாங்கர் கோட்டையின் திகில் வரலாறு!
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையான பாங்கர் கோட்டை இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் பேய்கள் உலாவும் இடம் மக்களால் நம்பப்படுகின்றது.
அந்த கோட்மையின் வலாகத்துக்குள் இரவு நேரத்தில் செல்வதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசாங்கமே இவ்வாறு தடை விதிக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். பாங்கர் கோட்டை தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அல்வர் மாவட்டத்தில் அமைந்துள் பாங்கர் கோட்டை இராஜா பகவந்த் தாசின் தலைநகராக இருந்தது.
பகவந்த் தாசின் காலத்திற்கு பிறகு அவரது இரண்டாவது மகன் மாதே சிங் பட்டத்திற்கு வந்தார். என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் கோட்டை கட்டப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வாழ்ந்தவர்கள் கோட்டையை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
தற்போது சிதிலமடைந்த இக்கோட்டையை இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.
சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இங்கு நுழைவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக கோட்டையின் பலகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் பேய்கள் இருப்பதாக உள்ளுர் மக்கள் நம்புகின்றனர்.
இக்கோட்டையை பற்றிய கதைகளில் இரண்டு விதமான கதைகள் மிகவும் பிரபலமாக பேசப்படுகிறது.
முதலாவது கதை
இங்கு வாழ்ந்து வந்த துறவி ஒருவரின் வீட்டின் மீது இங்கு கட்டப்படும் கோட்டையின் நிழல் விழக்கூடாது என்று கூறியிருநட்ததாகவும் அதனை பின்பற்றியே அரசர்களும் கோட்டையை கட்டியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால், மாதோ சிங் அந்த விதிமுறையை மீறி துறவியின் வீட்டின் மீது கோட்டையின் நிழல் படும்படி கடடியதன் காரணமாக அன்றிலிருந்து அந்த துறவியின் சாபம் கோட்டையின் மீது விழுந்து விட்டதாக ஒரு கதை கூறப்படுகின்றது.
இரண்டாவது கதை
ரத்னாவதி எனும் இளவரசியை மையாமாக கொண்டு இரண்டாவது கதை கூறப்படுகின்றது.ரத்னாவதி பேரழகியாக இருந்ததன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள எல்லா நாட்டு இளவரசர்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், ரத்னாவதியின் மீது ஒரு மந்திரவாதிக்கு ஆசை இருந்ததாக கூறப்படுகின்றது.
அவன் ரத்னாவதியை அடைய வேண்டும் என்று அவர் பயன்படுத்தக்கூடிய வாசனை திரவியத்தில் அவரை தன்வசப்படுத்துவதற்கான சில பொருட்களை கலந்து வைத்துள்ளார்.
இதை அறிந்துக்கொண்ட இளவரசி ரத்னாவதி அந்த வாசனை திரவியத்தை ஒரு பெரிய பாறையின் மீது தூக்கி எறிய அந்த பெரிய பாறையால் நசுக்கப்பட்டு மந்திரவாதி இறந்துள்ளார்.
அவன் இறப்பதற்கு முன் இவ்விடத்திற்கு கொடுத்த சாபம் காரணமாக அந்த இடத்தில் யாராலும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ முடியாது என சாபம் கொடுத்துள்ளார்.
அதனால் தான் இக்கோட்டை அமானுஷ்யங்கள் நிறைந்ததாக மாறிவிட்டதாக கூறப்படுகின்றது. இரவில் பலவிதமான சப்தங்கள் கேட்பதாகவும், இரவில் இக்கோட்டைக்குள் சென்றால், யாரோ தங்களை கண்காணிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் கோட்டை பற்றிய பல்வேறு விதமாக அமானுஷ்ய கதைகள் குறிப்பிடப்டுகின்றது.
‘இக்கோட்டைக்குள் இரவில் சென்ற யாரும் அதன் அனுவங்களை பகிர்ச்துக்கொள்வதற்கு உயிருடன் திரும்பியதில்லை என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாகதொல்பொருள் ஆய்வுத்துறை இரவில் இக்கோட்டைக்குள் மக்கள் செல்லத் தடை விதித்துள்ளது.
இருப்பினும், ஆர்வம் நிறைந்த சுற்றுலாப்பயணிகள் இக்கோட்டையை இரவில் சுற்றிப் பார்ப்பதற்கு வந்த வண்ணம் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் ஆய்வுக்காக சென்ற வேறு சிலரோ, அக்கோட்டையில் அமானுஷ்ய சக்தி என்று ஏதும் இல்லை. உண்மையில் கோட்டையை சுற்றிலும் உள்ள காட்டில் இருக்கும் மிருகங்களின் இரைச்சலும், மரங்கள் காற்றில் உராயும் சத்தமே அமானுஷ்யத்தை ஏற்படுத்துவது போல் தோன்ற செய்கின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
childhood illnesses : குழந்தைகளை குறிவைக்கும் பொதுவான நோய்கள் என்னென்ன? சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |