கணவர் மரணத்திற்கு பின் களத்தில் இறங்கிய நடிகை! ஆட்டத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்
தனது தோழியுடன் சேர்ந்து நடிகை மீனா குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் "கண் அழகியாக" கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் பிரபல்யமான நடிகையாக வலம் வந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரஜினி, கமல், அஜித் என தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் எனும் இன்ஜினியரைத் திருமணம் செய்துகொண்டார் இவருக்கு தற்போது நைனிகா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார்.
தற்போதும் சினிமாவை விட்டு விலகவில்லை, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தளவு சினிமாவின் மீது பற்று கொண்டவராக காணப்படுகிறார்.
நடன வீடியோ காட்சி
இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கல்லீரல் பிரச்சினையால் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோவதாக பல சர்ச்சையான விடயங்கள் பேசப்பட்ட போதும் அவர் அவரது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் வீட்டில் நடக்கும் சில நிகழ்வுகள், பண்டிகை வாழ்த்து செய்தி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளிலும் ஆர்வமாக தான் இருந்து வருகிறார்.
இதன்படி, தன்னுடைய தோழியுடன் இணைந்து,“மால டம் டம், மஞ்சர டம் டம் ” என்ற பாடலுக்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “ கணவர் இழப்பிற்கு பின்னர் பழைய மீனாவை இப்போது தான் பார்க்கிறோம்” என நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.